மும்பை தோற்றதற்கு நானே பொறுப்பு - ஹர்பஜன் சிங்கின் வாக்குமூலத்தால் பரபரப்பு!
கி.அ.அ.அனானி அனுப்பிய கார்ட்டூன்:
பிற்சேர்க்கை:
மேற்கண்ட கேலிச்சித்திரத்தை இட்லி வடைக்கு அனுப்பினோம். அதை அவர்
பிரசுரித்து விட்டு பின்னர் "சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த படம்
நீக்கப்படுகிறது. யாருடைய மனமும் புண்படுத்தும் எண்ணம் இட்லிவடைக்கு
என்றும் இருந்ததில்லை. நன்றி...." என்ற வாசகங்களுடன் நீக்கிவிட்டார்.
இடுகை இருக்கிறது, சித்திரம் இல்லாமல் :)
இதிலிருந்து இந்த கேலி சித்திரத்தை போடுவதில் இட்லி வடைக்கு மறுப்பில்லை. "மனது புண்பட்ட" சிலரது வேண்டுகோளின் படி நீக்கியிருக்கிறார் என்று அர்த்தம் செய்து கொள்கிறேன்.
அம்பானி குடும்பத்துக்கு தமிழ் தெரியும் என்றோ அல்லது அவர்கள் நிரந்தர "இட்லி வடை " வாசகர்கள் என்றோ எந்தத் தகவலும் நான் இதுவரை கேள்விப் படாததால் இந்த மனம் புண்படுதல் நேரடியாக " அம்பானி குடும்பத்துக்கு " இல்லை. "அம்பானி ரசிகர்களுக்கு " மனிதாபிமானத்தின் அடிப்படையில் மட்டுமே என்றும் புரிந்து கொள்கிறேன்.
எந்த உடல் ஊனத்தையும் கேலி செய்வது தவறு.ஆனால் நான் பார்த்த வரையில் குண்டு , ஒல்லி.தொப்பை போன்ற மாறும் தன்மையுடைய அம்சங்களைக் கேலி செய்வது சாதாரணமாக நடக்கும் விஷயங்கள்தான். இது தவறென்று சொல்பவர்கள் " ஒல்லி குச்சி " நரசிம்மனையும். "தயிர் வடை" தேசிகனயும், "குண்டு" கல்யாணத்தையும் தமிழ் சினிமா உலகம் அவர்களது உடல் வாகை வைத்து கேலி செய்து படம் பண்ணும் போது அதைப் பார்த்து கெக்கெக்கே என்று சிரிக்கிறோமா இல்லை அல்லது "ச்சே..ச்சே இதெல்லாம் தப்பு " என்று பக்கத்து சீட்டில் இருப்பவரிடமாவது சொல்கிறோமா என்று "புண் பட்ட " மனதைத் தொட்டு யோசிக்கலாம். நானும் குண்டு மல்லிகா, குட்டை கோமளா..டேய் இப்ப டல் திவ்யா தூள் திவ்யா ஆகிட்டாடோய்" மாதிரியானவைகளை தினமும் பார்ப்பதால் குண்டுத்தன்மையை கேலி செய்வது எனக்குத் தப்பாகப் படவில்லை.
இதைச் சொல்வது நான் அம்பானிக்களை கிண்டல் செய்தது சரி என்று சப்பைக் கட்டு கட்டுவதற்காக கண்டிப்பாக இல்லை.
இந்தியா போன்ற நாட்டில் பணம் படைத்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக 5 பேர் இருப்பதற்காக,1000 கோடி ரூபாயில் "அன்டில்லா " என்கிற அரண்மனையை விடப் பெரிய மாளிகையைக் கட்டி அதற்கு 70 லட்சம் ரூபாய் மின் கட்டணம் கட்டிக் கொண்டு பின் வாஸ்து சரியில்லை என்று சொல்லி கட்டிய வீட்டில் குடியிருந்தும் குடியிருக்காமல் இந்திய ஏழ்மையை எள்ளி நகையாடும் விதமாக வாழ்க்கை நடத்தும், அந்த பணத் திமிரை வெளிக்காட்டுவதில் சிறிதும் தயக்கம் காட்டாத அம்பானிக்களையும் ஊதாரித்தனத்திலும் தாந்தோன்றித்தனத்திலும் அவர்களை விட எதிலும் சற்றும் சளைக்காத மல்லையாக்களையும் மற்றும் அது போன்ற பணத்திமிர் பிடித்தலைபவர்களையும் "எல்லா விதத்திலும் " கிண்டலும் கேலியும் செய்வதில் எனக்கு எந்த தயக்கமோ ,வருத்தமோ கிடையாது என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.
இதே கருத்துள்ள ஒரு பின்னூட்டத்தை இட்லி வடையிலும் பதிந்துள்ளேன்.
கி அ அ அனானி.
2 மறுமொழிகள்:
டெஸ்ட்
மேற்கண்ட கேலிச்சித்திரத்தை இட்லி வடைக்கு அனுப்பினோம். அதை அவர் பிரசுரித்து விட்டு பின்னர் "சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த படம் நீக்கப்படுகிறது. யாருடைய மனமும் புண்படுத்தும் எண்ணம் இட்லிவடைக்கு என்றும் இருந்ததில்லை. நன்றி...." என்ற வாசகங்களுடன் நீக்கிவிட்டார். இதிலிருந்து இந்த கேலி சித்திரத்தை போடுவதில் இட்லி வடைக்கு மறுப்பில்லை. "மனது புண்பட்ட" சிலரது வேண்டுகோளின் படி நீக்கியிருக்கிறார் என்று அர்த்தம் செய்து கொள்கிறேன்.

Post a Comment